சினிமா

தளபதி 62 படம் குறித்த புதிய தகவல்கள்


துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 62 படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்து அண்மையில் சில தகவல்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது.  அதில் இந்த படத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், படத்திற்கு தலைப்பு கலப்பை என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அத்துடன் இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் முதல்முறையாக ஊனமுற்றவராக நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல்களை முற்றாக படக்குழு மறுத்துள்ளது.

இந்தநிலையில் தற்பொழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக இந்த படத்தினை தயாரிப்பதாகவும் கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்வதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைக்க இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply