விளையாட்டு

செரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு


உலக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடர் இம்மாதம் 15-ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகின்றது.

குழந்தை பிறந்து 4 மாதங்களே ஆன நிலையில், முழுமையாக தயாராகாததால் தான் குறித்த போட்டியிலிருந்து விலகுவதாக அவர், தெரிவித்துள்ளார். வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் போட்டியில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனத் தொவித்த செரீனா வில்லியம்ஸ் கடந்த முறை விளையாடியதனை விட சிறப்பாக செயல்பட விரும்புவதாகவும் அதற்கு தனக்கு சிறிது கால அவகாசம் தேவை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடன் அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடரில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி 7-வது முறையாக சம்பியன் பட்டத்தின வென்றிருந்தார். இது அவரது 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply