உலகம் பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

சுவிஸலாந்து உள்ளுராட்சித் தேர்தலிலும் ஈழத் தமிழ் தேசியம்!

நாட்டில் தற்போது, உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் சுவிற்ஸலாந்து நாட்டின் உள்ளுராட்சித் தேர்தலிலும் ஈழத் தமிழ் தேசியம் பேசப்படுகின்றது. அந் நாட்டின் தொழில் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது பிரசாரத்தில் ஈழத் தமிழர்களிடமும் வாக்கு கோருகின்றார்.

அவர் சார்பில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் ஒன்றில் ஈழத் தமிழ் தேசியத்திற்காக உழைக்கும் மார்செல் போசொனே அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இவர் தொழிற் கட்சியின் சார்பில் சூரிச் நகர வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள் பலரது வழக்கில் அறத்தின்பால் நின்று, மிகு திறனுடன் வாதாடி வெற்றி பெற்றவர் மார்செல் போசொனே என்றும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல செயல்களை இவர் புரிந்துள்ளதாகவும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, இலங்கை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டும், வேறு பல கட்சிகளும் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் பேசி வரும் நிலையில் சுவிஸ் நாட்டு உள்ளுராட்சித் தேர்தலிலும் ஈழத் தமிழ் தேசியம் பேசப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply