இலங்கை பிரதான செய்திகள்

நூறு ஏக்கர் தவனைக் கண்ட வயல் வெளியில் ஆயுதங்கள் மீட்பு…

File Photo
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூலாக்காடு கிராம சேவகர் பகுதியில் உள்ள நூறு ஏக்கர் தவனைக் கண்டம் என அழைக்கப்படும் வயல்வெளி பிரதேசத்திலேயே, இன்று (06.08.18) காலை எல்.எம்.ஜீ. ஒன்றும் ரி.56 வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (05.08.18) காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர் தமது வயலில் வரம்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது மர்மப் பொருள் ஒன்று தெரிவதனை அறிந்து வாழைச்சேனை காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அவற்றினை மீட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers