இந்தியா பிரதான செய்திகள்

டெல்லியில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விபத்து – குழந்தை உட்பட 7 பேர் பலி – பலர் காயம்

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் உள்ள 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 7 பேர் கட்டிட இடுபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap