பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் தொடரிலும் 5 ஒருநாள் தொடரிலும் 3 இருபதுக்கு 20 தொடரிலும் பங்கேற்று விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்ததுடன் ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையில் முதலாவது போட்டியில் சுப்பர் ஓவர் மூலம் தென்னாபரிக்க அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் 2 ஆவது போட்டி நேற்று செஞ்சூரியனில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப்பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 2-0 என வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.