பிரதான செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு

பாகிஸ்தானிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை இலங்கை அணிக்கு வழங்குவதற்கு அந்நாடு முன்வந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் தமக்கு வழங்கியுள்ளதாகவும் இது குறித்து தாம் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் இது குறித்த அறிக்கையை இலங்கை கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுசபையின் நிறைவேற்று குழுவிற்கு வழங்குவோம் எனவும் அதனடிப்படையில் அவர்கள் முடிவெடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார் #பாகிஸ்தானில்  #இலங்கைஅணி #பாதுகாப்பு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.