தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். எஸ்மரால்டஸ்சுக்கு அருகே 19 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் 5.4 ரிக்டரர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது
இந்த நிலநடுக்கம் காரணமாக கடற்கரை நகரமான எஸ்மரால்டாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி இரவு முழுவதும் வீதிகளிலும் வெளிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதுடன் ஏராளமான வீடுகளில் சேதமடைந்துள்ளன.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன் பாடசாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.