ஜெயலலிதாவுக்கு சொந்தமான தற்போது சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் பங்களாவுக்குள்
கடந்த சனிக்கிழமை காலை திடிரென நுழைந்த ஒரு குழு குறித்த 2 அறைகளைப் பார்வையிட்ட பின்னர் சீல் வைத்துவிட்டு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறையில் அதிமுக கட்சி தொடர்பான ஆவணங்கள் அல்லது அமைச்சர்கள் தொடர்பான கோப்புகள்; இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் கைதுசெய்யப்படுவார்?
இதேவேளை நெஞ்சுவலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை மருத்துவமனையிலேயே வைத்து கைது செய்ய வருமானவரித் துறையினர் திட்டம் தீட்டி இருப்பதாகவும் இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.