முன்னாள் திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்றைய தினம் பீ.பி.ஜயசுந்தர ஆஜராகியுள்ளார்.
2014ம் ஆண்டில் ஐந்து பில்லியன் ரூபா அரச சொத்து துஸ்பிரயோக சம்பவம் தொடாபில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை தீர்மானத்திற்கு முரணான வகையில் இந்திய நிறுவனமொன்றிடமிருந்து 100,000 மெற்றிக்தொன் எடையுடைய அரிசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக அரசாங்கத்திற்கு ஐந்து பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் திறைசேரியின் செயலாளரிடம் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
135
Spread the love
previous post