கட்டுரைகள்

“தமிழர் தலையில் கொட்டப்பட்ட கொத்துக் குண்டுகள்” நிரூபிக்க முடியுமா என்கிறது சிறீலங்கா அரசாங்கம்:

வன்னிமகன் – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பதிவு:-

"தமிழர் தலையில் கொட்டப்பட்ட கொத்துக் குண்டுகள்"  நிரூபிக்க முடியுமா என்கிறது சிறீலங்கா அரசாங்கம்:

 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களப்படையினர்
சர்வதேச மனிதாபிமான வழிகாடடல்களையோ அல்லது சர்வதேச போர் விதிமுறைகளையோ என்றுமே ஒப்புக்குத் தானும் கடைப்பிடித்ததில்லை.

கடந்த அரைநூறாண்டுக்கு மேலாக இடம்பெற்றுவரும் தமிழருக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் நீதிக்கு முரணான கைதுகள் சித்திரவதைகள்> பாலியல் வன்கொடுமை> காணாமல் போகச்செய்தல்> படுகொலைகள் என்பன மிகவும் மிகவும் வெளிப்பாடையான உண்மைகளே.. இவற்றைக் சிறிலங்கா சிங்கள பேரினவாதம் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

இந்த நிலையில் அண்மையில் ‘காடியன்’ பத்திரிகையில் சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகள் (cluster bombs)  வீசப்படடமை தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது.

இதனையிட்டு சிறிலங்கா அரச தரப்பினரிடம் வினவப்பட்ட்டபோது பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் அதனை மறுத்ததோடு ‘நிரூபிக்க முடியுமா’ எனவும் சவால் விடுத்துள்ளார்.

இந்த கொத்துக் குண்டு  விவகாரம் இப்போதுதான் பேசப்படுவதாக நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் இந்த விவகாரம் 2012 மற்றும் 2014 களில் ஏற்கனவே பேசப்படட ஒன்றுதான்.

ஐ. நா அபிவிருத்தித் திடடத்தின்  கண்ணிவெடிகள் தொடர்பான தொழிநுட்ப ஆலோசகர் அலன் போஸ்டன் (Allan Poston) சிறிலங்காவின் கொத்துக் குண்டு பாவனை தொடர்பில் ஐ நா வுக்கு தகவல் தந்திருந்தார்.

பின்னர் அமரிக்க அதிகாரிகள் மற்றும் போர்க்குற்ற விடையங்கள்> உலகளாவிய குற்றவியல் நீதி திணைக்களம் என்பவற்றிற்கான அதிகாரி ஸ்டெபன் ஜெ . ராப் (Stephen J. Rapp) ஆகியோரைச் சந்தித்த  மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் இவை தொடர்பில் பேசியிருந்தனர்.

சிறிலங்காப் படையினரின் கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதப் பாவனை தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் அவர்கள்  கோரியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா தரப்பு> கொத்துக் குண்டுகளை சிறிலங்காப் படையினர் என்றும் கொள்வனவு செய்யவில்லை என்றும் தம்மிடம் இல்லாத ஒன்றை தாம் எப்படி பயன்படுத்தியிருக்க முடியும் என்றும் கூறியிருந்தது.

இறுதிக் கட்ட போரின்போது வன்னியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் சிறிலங்காப் படையினர் கொட்டிய  இந்த கொத்துக் குண்டுகள் பரிச்சையமானவையே.

முதலில் கேட்கும் ஒற்றை  வெடிப்பொலி> காவுகுண்டு வெடித்து உள்ளிருக்கும் நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளை விதைப்பதைக் குறிக்கும். பின்னர் சில வினாடிகளில் சிதறிய குண்டுகள் வெடிக்க ஆரம்பிக்கும். இந்த சத்தம் உச்சத் தொனியில் “ரம்ஸ் ” வாசிப்பதுபோல் இருக்கும். நூற்றுக்கணக்கான சிறுகுண்டுகளில் இருந்து ஆயிரக் கணக்கான சிதறுதுண்டுகள் சிதறும். விளைவு மிகவும் மோசமானது.

இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளால் கொல்லப்படட> படுகாயமடைந்த மக்கள் ஏராளம். இன்றும் கொத்துக் குண்டுகளால் படுகாயமடைந்த பலர் இரத்த சாட்சியங்களாய் எம்மிடையே உள்ளார்கள்.

சரி எங்கள் சாடசியத்தை விடுவோம்.

பாகிஸ்தானிய ஆயுத ஏற்றுமதி அமைப்பின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முஹமட் பாரூக் 2008 ஜூலை பாகிஸ்தானின் டோன் (The Dawn) பத்திரிகைக்கு ஒரு செவ்வி வழங்கியிருந்தார். அதில் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அது 300 மில்லியன் அமெரிக்க டொலர் களாக உள்ளதாகவும் குறிப்பிடடார்.

,tw;wpy;; வெடிபொருட்கள்> ரொக்கெட் லோஞ்சர்கள்> தோளில் வைத்து ஏவும் வானெதிர்ப்பு ஏவுகணைகள் அடக்கம் எனவும் Fwpg;gpl;lhu;. இந்த வகையில் சிறிலங்கா தம்மிடமிருந்து  கொத்துக் குண்டுகள்> ஆழ ஊடுருவும் குண்டுகள்> ரொக்கெட்கள் மற்றும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் என்பனவற்றை கொள்வனவு செய்தது என்றும் தெரிவித்தார்.

இந்த விடையம் சிறிலங்காப் படையினர் கொத்துக் குண்டுகளைக்
கொண்டிருந்தனர் என்பதை உறுதிசெய்யும் வலுவான ஆதாரமாகும்.

அடுத்து சிறிலங்கா> ரசியா> உக்கிரேன் போன்ற நாடுகளில் இருந்தும்
பெருமளவான ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருந்தது. சிறிலங்காப் படையினரால்  வீசப்படட கொத்துக் குண்டுகளில் ரசியத்  தயாரிப்பு குண்டுகளும்  (Russian made OFAB-500 cluster bombs )  இருந்தமை ஆதார படுத்தப் பட்டுள்ளது.

ஐ.நாவின் கண்ணிவெடி தொடர்பான நிபுணர்கள் தமது நடவடிக்கைகளின் போது வன்னியில் சிறிலங்கா படையினரால் ஏவப்படட கொத்துக் குண்டுகளின் பாகங்களை தாம் மீட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்காப் படைகள் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்படட இத்தகைய கொத்துக் குண்டுகளை மாதிதிரமின்றி தடைசெய்யப்படட வேதியல் ஆயுதங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளன.

அண்மையில் இது தொடர்பாக சிறிலங்காப் பிரதமர் ‘யுத்தத்தின் போது இரசாயனங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை’ என கூறியிருந்தார்.

ஆனால் வன்னியில் அப்போது பணியாற்றிய வைத்தியர்களின் குறிப்புகளும்   ‘சாட்சியங்கள் இல்லாத போர்’-( “War Without Witness”) அமைப்பினரால் மேற்கொள்ளப் பட்ட சுயாதீனமான விசாரணையின் முடிவுகளும் பிரதமரின் கூற்றை ஆணித்தனமாக மறுக்கின்றன.

சிறிலங்காப் படையினரால் வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப் படடமையும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படடமையும்    ஆய்வில் தெரியவந்துள்ளது..இந்த ஆரம்பகட்ட முடிவுகள் இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வைத்தியர் ஒருவரால் மறுசீராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் வேதியல் அறிக்கையின் படிஇகாயங்களில்
Triethanolamine (C6H15NO3) ,  Phosgene (CCl2O)  போன்ற  வேதியல் பொருட்கள் காணப்பட்டுள்ளன.

சிறிலங்காவின்  போர்க்குற்றம் தொடர்பில் பல்வேறு சாடசியங்கள் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வேளையில் அதற்கு வலுச்சேர்க்கக் கூடிய> கொத்துக் குண்டுப் பாவனை மற்றும் இரசாயன ஆயுதப் பாவனை என்பன தொடர்பில் வலுவான குரல்கள் சர்வதேச அரங்கில்
எழுப்பப் படவேண்டும். காடசிப் படுத்தல் நிகழ்வுகளில் இவை தொடர்பான ஆதாரங்கள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த இனவழிப்புக்கான நீதி தேடலானது தமிழரின் உணர்வு வெளிப்பாடு  என்ற வரையறைக்குள் மட்டுமே மட்டுப்படுத்த பட்டுவிடாது  அனைத்து வழிகளிலும் அதற்கான முனைப்பை முன்னெடுக்க வேண்டும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply