குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
இந்தியா அழுத்தம் கொடுத்தமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்தை கைவிடுமாறு இந்தியா மஹிந்த அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட கருத்து மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் கோதபாய ராஜபக்ஸ இந்த அழுத்தம் குறித்து தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ராஜிதவின் கருத்து தொடர்பில் பாராளுமன்றிலும அதற்கு வெளியிலும் கேள்விகள் எழுப்பப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படாது என தாம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தெளிவுபடுத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.