குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்படையினர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோசித ராஜபக்ஸவிற்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், கடற்படையினர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் நடத்தப்பட்டன் பின்னர் யோசித கடற்படையில் வகித்து வரும் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.