Home இலங்கைகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:-

காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யுத்தம் தொடர்பில் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் நிறுவப்படாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினை வடக்கு மக்களுக்கு மட்டுமானதல்ல தெற்கிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சியினர் காணாமல் போனவர்கள் அலுவலகத்தை படையினருக்கு துரோகம் இழைக்கும் பொறிமுறைமையாக குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இந்த அலுவலகத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More