இலங்கை

“எம்.ஜி.ஆரின் ஆணைப்படி ஈழ தமிழர்களுக்கு நிதி திரட்ட வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடாத்தினேன்”

இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர் கொண்டோம். – கங்கை அமரன். – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

"எம்.ஜி.ஆரின் ஆணைப்படி ஈழ தமிழர்களுக்கு நிதி திரட்ட வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடாத்தினேன்"

ஈழ தமிழ் உறவுகளுக்கு நிதி திரட்ட 1980களில் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி இருந்தோம். அதற்காக இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர்கொண்டோம். என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த வேளை ஈழ தமிழ் மக்களுக்காக நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்த ஆணையிட்டார்.

அவரின் ஆணைக்கு, இணங்க நாமும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி இருந்தோம். அதற்காக இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர்கொண்டோம்.

இங்கே வாழும் மக்கள் துன்ப பட்ட துயரப்பட்ட விடயங்கள் , மறக்க முயலுங்கள். பழசை நினைச்சு வாழ வேண்டும் என்று இருந்தாலும், இன்றைக்கு நாம மாற வேண்டிய அடுத்த சமூதயத்திற்காக நாம போட்ட விதைகள் விதைச்சு மேலே வந்து பயன் தரும், நிழல் தரும். என்பதனை மனதில் கொண்டு, நலத்திற்காகவும், நடந்து போனவைகளை மறப்பதற்காகவும், நன்றி செலுத்தும் வண்ணமாக அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள். என கூறினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply