130
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஏமனின் ஹவுத்தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து அமெரிக்காவின் நாசகாரி கப்பலைநோக்கி ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதாக பென்டகன் தெரிவித்துள்ளது.எனினும் இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கப்பலை இலக்குவைத்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் ஆனால் அவை கப்பலை அடைவதற்கு முன்னரே கடலில் வீழ்ந்து வெடித்துவிட்டதாகவும் இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்எஸ் மெசன் என்ற நாசகாரி கப்பலை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
Spread the love