Home இலங்கைஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக வியட்னாம் அறிவிப்பு

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக வியட்னாம் அறிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக வியட்னாம் அறிவித்துள்ளது. இலங்கையுடனான மரபு ரீதியான உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதாக வியட்னாம் பிரதிப் பிரதமர் Vu Duc Dam தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளினதும் உயர் மட்ட ராஜதந்திரிகள் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் இரு நாடுகளினதும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More