குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கம் ஊடகத் தணிக்கையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். சில விடயங்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடக் கூடாது என ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் ஜனாதிபதியும் பிரதமரும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் தனியார் ஊடகங்கள் அதிகளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக சில ஊடகங்களின் அரசியல் பத்திகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய விவகாரங்களில் கூட்டு எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றில் போதியளவு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளில் சபாநாயகர் கருஜயசூரியவும் ஈடுபட்டுள்ளதாகவும் தாம் எந்தவொரு இன மத சமூகத்திற்கு எதிராகவும் செயற்பட்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி என்ற பெயரினை உடையவர்கள் கருணையாக நடந்துகொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.