குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமைச்சர் வஜிர அபேகுணவர்தனவின் கருத்து கள்வர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதற்கு நிகரானது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அண்மையில் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன குற்றம் சுமத்தியிருந்தார். குற்றவியல் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையில் எந்தவொரு நபரையும் அழைத்து விசாரணை செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் அழைக்கப்படும் போது அதிகாரிகள் செல்லக் கூடாது என அமைச்சர் கூறுவது ஆச்சரியமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அல்லது லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு போன்றவற்றினால் அழைப்பு விடுத்தால் வாகனமும் பணமும் வழங்கி அவர்களை அனுப்பி வைப்பேன் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.