குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேற்றைய தினம் நள்ளிரவு முதல் தனியார் பேரூந்து சங்கங்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் போதான அபராதத் தொகை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.
தனியார் பேரூந்து சங்கங்களின் சிலவற்றின் தலைமையில் இந்தப் போராட்டம் ஆரம்பி;க்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டென்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்கள் எதிர்நோக்கக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை கூடுதலான பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் புகையிரதத் திணைக்களம் விசேட புகையிரத சேவைகளையும் ஆரம்பித்துள்ளது.