குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த அரசாங்கம் கடும்போக்குவாதத்தை போசித்தது என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதத்தை போசிப்பதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினை மஹிந்த அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது எனவும் பௌத்த மற்றும் இஸ்லாமிய கடும் போக்குவாத அமைப்புக்களைப் பயன்படுத்தி அரசியல் லாபமீட்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்ததாக தெரிவித்துள்ள அவர் கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை அழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஏற்கனவே இருந்த இடங்களில் பௌத்த விஹாரைகள் அமைக்கப்படுவதாகவும் விஹாரைகள் அமைக்கப்படுவதனை தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர் கிளிநொச்சியில் இராணுவ முகாமிற்குள் புத்தர் சிலை அமைக்கப்பட்டதாகவும் சிலர் அதனை பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 0பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் அடையாளப்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.