பல்சுவை

2017 வசந்தகால மலர் கண்காட்சிக்கு ஆயத்தமாகும் விக்டோரியா :

2017 புதுவருடத்தை முன்னிட்டு நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு தொடர்ந்து நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு கட்டமாக 2017 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் மலர் கண்காட்சிக்கு நுவரெலியா விக்டோரியா பூங்கா ஆயத்தமாகி வருகின்றது. இங்கு பலவிதமான பூக்கள் பூப்பதற்கு ஆரம்பிக்க இருக்கின்றது.

அத்துடன் இப் பூங்கா நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய வகை பூக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பலவிதமான அழகிய கோணங்களில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

அரிய வகை மலர்கள் கண்கவரும் வகையில் நாட்டபட்டு வருகின்றன. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத  மலர் கண்காட்சி பார்வையாளர்களுக்கு சிறந்த ஒரு கண் கவரும் விருந்தாக அமையும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply