குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் உள்ளிட்ட தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் 9ம் திகதி சென்னையில் சட்டத்தரணிகள் கூடி இந்த விடயம் குறித்த ஆராய உள்ளனர். இலங்கையின் அரசியல் சானத்தின் 6ம் திருத்தச்சட்டம் தொடர்பிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் றாம்சே கிளார்க் (Ramsey Clark) , தமிழக ஒய்வு பெற்ற நீதவான் சிவசுப்ரமணியம், நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முன்வைப்பது குறித்த ஆரம்ப பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் சாசனத்தின் 6ம் திருத்தச் சட்டம் , தமிழ் மக்களின் சுய நிர்ணய சுயாட்சி பிரகடணங்களை தடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களது அரசியல் அபிலாஸைகளை தடையின்றி வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.