161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மதுபான போத்தல்களை வழங்கி வாக்கு பெற்றுக்கொண்டதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மெய்யாகவே ஓர் அரசியல்வாதிக்கு வழங்கிய வாக்குகளே தமக்கு கிடைக்கப்பெற்றது எனவும் தமது பாராளுமன்ற உறுப்புரிமை 100 வீதம் மக்களுக்கு சொந்தமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்ற போதிலும் திடமான தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கொள்கைகளின் அடிப்படையிலான திட்டமொன்று அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love