குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
லண்டனில் றோயல் இன்ஸ்டிடியுட் ஒப் இன்டர்நெசனல் எபயார்ஸ் நிறுவனத்தில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் முழு அளவில் பாதிக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியன தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மீளவும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கி விசாரணை செய்வது குறித்து பல்வேறு பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், சுயாதீனமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.