Home உலகம்ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து பாராளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் – உச்சநீதிமன்றம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து பாராளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் – உச்சநீதிமன்றம்

by admin

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  விலகுவது தொடர்பான நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கும் முன்னர், அது குறித்து  பாராளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என  பிரித்தானிய  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியா   ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது பிரித்தானிய  சட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்படும் என்பதுடன் பிரித்தானிய மக்கள் சில உரிமைகளை இழப்பார்கள் என்பதனாலும்  பாராளுமன்றத்தில் இந்த விடயம்  குறித்து விவாதிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்  தெரிவித்துள்ளது.

பதினோரு நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இந்த வழக்கை விசாரித்ததில் எட்டு நீதிபதிகள் பாராளுமன்ற ஒப்புதல் தேவை என்றும், மூவர் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தனர்.

எனினும்  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து  ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திலோ அல்லது வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து சட்டமன்றங்களிலோ விவாதிக்க தேவையில்லை என அனைத்து நீதிபதிகளும்  ஒருமித்து தெரிவித்துள்ளனர்.

எனினும் பிரித்தானியா  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது எனும் முடிவுக்கு சில உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேற வேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், விலக வேண்டும் எனும் கருத்து வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More