Home இலங்கைஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் அவர்களின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்ளையர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டு இருந்தார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் புதன் கிழமை மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.  அதன் போது இருவரையும் எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.

இதேவேளை சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த இருந்ததை அடுத்து இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன் சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More