202
குவைத்தில் கொலை வழக்கு ஒன்று தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 7 பேர் இன்று தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இருவர் குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் எகிப்து , பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என குவைத் அரச செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் இன்றுதான் முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love