தமிழீழ விடுதலைப்புலிகளின் 2009 இல் மௌனிப்பிற்கு பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதை தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் நிரூபணம் செய்கின்றன. இந்த அதிகரிப்பிற்கு காரணம் அரச இயந்திரம் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமையே ஆகும். இலங்கை அரசின் காவற்துறை இவ்வாறன சம்பவங்களை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை.
இன அழிப்பு ஒன்றை எதிர்நோக்கிய ஒரு சமூகம் மீண்டும் அதே போன்ற ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்கின்றதா என்ற சந்தேகம் இவ்வாறன தொடர் சம்பவங்கள் மூலம் ஏற்படுகின்றன. அரச இயந்திரம் வேண்டுமென்றே இவற்றை கடுப்படுத்த தயன்குகின்றதா? என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றன.
கடந்த வருடம் கூட பாடசாலை மாணவி ஒருவர் புங்குடுதீவில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இதற்கு முன்னர் காரைநகரிலும் கிளிநொச்சியிலும் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்கள். தமிழ் சமூகம் என்றுமே எதிர்கொண்டிராத சமூக விரோத குற்ற செயல்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னரான காலத்தில் எதிர்கொண்டு வருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய காவற்துறையும் மௌனம் சாதித்து வருகின்றது. இந்த நிலையில் தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து எதிர்வரும் 27.01.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 தொடக்கம் 10.00 வரையான ஒரு மணிநேர பணிபுறக்கணிப்பும். கதவடைப்பும் மேற்கொள்ளுமாறு அனைத்து அரச, அரசசார்பற்ற. தனியார்துறைகளை கேட்டுக்கொள்கிறேன்.
புங்குடுதீவு மாணவியினுடைய படுகொலை தீர்ப்பு உட்டப்படவில்லை. அதன்பின்னர் கிளிநொச்சி, காரைநகர் மாணவிகள் மரணம். நேற்றைய தினம் ஏழுமாத கர்ப்பிணி தாயின்படுகொலை. இதுதவிர வெளியே தெரியப்டுத்தப்படாத பலபாலியல் வன்கொடுமைகள் என்பவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டிய நிலையில் சமூகபொறுப்புள்ள அனைத்து பிரஜைகளும் தங்களின் ஆதரவை வெள்ளிக்கிழமை ஒருமணி நேரபணி புறக்கணிப்பையும் கதவடைப்பையும் மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.
திருமதி அனந்தி சசிதரன்
உறுப்பினர், வடக்கு மாகாண சபை