172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் கிரிகர் டிமோரோவ்வை எதிர்கொண்டார்
சுமார் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில்; நடால், ரோஜர் பெடரருடன் போட்டியிடவுள்ளார். நடால் 14 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love