178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மரண தண்டனை விதிக்கப்பட்ட 60 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க உள்ளார். நாட்டின் 69ம் தேசிய சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 60 பேருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதவான் நிமால் ஈ திஸாநாயக்கவின் தலைமையிலான குழு ஒன்றினால் இந்த 60 சிறைக் கைதிகளுக்குமான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Spread the love