ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மசோதா பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளது. மசோதாவிற்கு 494 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் மூலமும், 122 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம் புதிய விதிகள் மற்றும் உட்பிரிவு 50 மசோதா திருத்தங்களை முன்நிறுத்தி பிரித்தானியா வெளியேறும் செயல்முறையை ஆரம்பிக்க தெரேசா மேக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்தகட்டமாக பிரெக்சிற் சட்டவரைவு பிரதிநிதிகள் சபையில் விவாதிக்கப்படவுள்ளது.
பிரதிநிதிகள் சபையிலும் ஒப்புதல் பெறப்படும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முழுமையாக விலகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.