Home உலகம் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 2 பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 2 பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை ஜெர்மன் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் பாரியளவில் தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 450 ஜெர்மனிய விசேட காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த தேடுதல் வேட்டையில் பங்கேற்றிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும் எந்தவொரு இடத்தை தாக்குவதற்கு திட்டமிட்டமை பற்றிய  விபரங்கள் வெளியாகவில்லை.

27 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 23 வயதான நைஜீரிய பிரஜையுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜெர்மனியில் பிறந்தவர்கள் எனவும், புகலிடம் கோரியோ அல்லது அகதிகளாகவோ நாட்டுகள் பிரவேசித்தவர்கள் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More