கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தாம் சித்தியடைந்த நிலையில் நேர்முகத் தேர்வொன்றை நடத்தி அதில் தம்மை நீக்குவது முறையற்றது என கிழக்கு முதலமைச்சரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் முறையிட்டனர்.
கிழக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கானபோட்டிப் பரீட்சையின் போது 305 பேர் சித்தியடைந்த்துடன் அவர்களுள் 222பேரே நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன,
இதன்போதே பரீட்சையில் சித்தியடைந்த தமக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென நியமனம் வழங்கப்படாதவர்கள் திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இதனையடுத்து குறித்த ஸ்தலத்துக்கு வந்த முதலமைச்சர் நசீர் அஹமட் ஆர்ப்பாட்டக்கார்ர்களை சந்தித்துடன் அவர்கள் தரப்பு நியாயங்களுக்கு செவிமடுத்தார்,
இதனையடுத்து நியமனம் வழங்கும் நிகழ்விற்கு பின்னர் தாம் முதலமைச்சர் அலுவலகத்தில் பட்டதாரிகளை சந்திப்பதாக கிழக்கு முதலமைச்சர் உறுதியளித்தார்.
இதன் பிரகாரம் மாலை தம் அலுவலகத்தில் பட்டதாரிகளை சந்தித்த்துடன் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த முதலமைச்சர் அவர்களுக்கான தீர்வினை பெற்றும் தருவதற்கு முழமையான முயற்சிகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்,
அத்துடன் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் அனைத்து விபரங்களையும் பெற்றுக் கொண்டதுடன் நாளை காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டி பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் முதற்கட்ட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அத்துடன் தம்மை நேரில் சந்தித்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்துக் கொண்ட முதலமைச்சருக்கு பட்டதாரிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் தமது விடயத்தில் முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்