164
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று இந்த கவன ஈர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக தாங்கள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு எதுவித பதிலையும் அரசாங்கம் வழங்காமல் இருப்பதை கண்டித்து இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராகவும் கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.
Spread the love