இலங்கையுடன் தொடர்ந்தம் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி;கொண்டாலும் இலங்கையுடனான உறவுகள் தொடரும் என பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் பிறைஸ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைப் பிரதி;நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கென தனியான வர்த்தகப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கப் போவதில்லை என்ற போதிலும் இரு தரப்பிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.