போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அனைவரும் நேர்மையாக பங்குபற்றுவதில்லை என உலகின் புகழ் பூத்த நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார். தன்னுடன் போட்டியிட்டவர்கள் அனைவரும் நேர்மையாக போட்டியிட்டார்கள் என தாம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 31 வயதான அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊக்க மருந்துப் பயன்பாட்டு தடை குறித்து அமெரிக்க காங்கிரஸ் சபையினர் முன்னிலையில் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போட்டிகளின் போது சக வீரர்கள் மோசடியான முறையில் போட்டியிடுகின்றார்கள் என்றே தாம் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.