துருக்கியில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தென்கிழக்கு துருக்கிப் பகுதியில் கடந்த 18 மாதங்களில் 2000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவரும் இதுவரையில் கைது செய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.