உலகம்

அமெரிக்கப்படையினர் சிரியாவில் அத்து மீறி பிரவேசித்துள்ளனர் – பசர் அல் அசாட்


அமெரிக்கப் படையினர் சிரியாவில் அத்து மீறி பிரவேசித்துள்ளதாக சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்  போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்த போதிலும் இதுவரையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய  அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர்  தனக்கு  எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் சில தரப்பினருக்கு அமெரிக்கா மறைமுக உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படையினர் சிரியாவிற்குள் பிரவேசித்துள்ள நிலைமையானது ஓர் அத்து மீறலாகவே நோக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply