யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என நிரூபிக்கும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தலைமையிலான தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட உள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் பிற்பகல் 3.00 மணிக்கு கோதபாய ராஜபக்ஸ தலைமையில் இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த விசேட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் நாளைய தினம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நிரூபிக்கும் நோக்கிலான இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் எதிர்வரும் 16ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.