201
சிரியாவின் வடக்கு பகுதியில் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்-ஜினா என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் மசூதி கட்டிடம் இடிந்து நொறுங்கியுள்ளதாகவும் மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தாக்குதல் நடத்திய விமானம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை
Spread the love