பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் ஈரோட்டில் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்ணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியில் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டால், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் நேரடியாக பாசன ரீதியாகவும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து தமிழகத்துக்கான உரிமையையும், பவானி ஆற்றின் உரிமையையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி தடுப்பணை தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஈரோடு பெருந்துறை சாலை யூஆர்சி நகரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும்
காவல்துறை அனுமதி மறுத்தாலும் இன்ற போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.