ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு இன்றி இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, மெசிடோனியா, மொன்டன்கிரோ மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியிருந்தன. இந்த நாடுகளைத் தவிர மேலும் 36 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
‘நல்லிணக்கம், பொறுப்புகூறுதல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.