Home உலகம்பங்களாதேஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 3 பேர் பலி

பங்களாதேஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 3 பேர் பலி

by admin


பங்களாதேஷில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சில்லெட் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக டாக்கா விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள இந்த தற்கொலைக் குண்டு  தாக்குதலில் தீவிரவாதியை தவிர யாரும் கொல்லப்படவில்லை.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பங்களாதேஷ் இராணுவம் நடத்திய தேடுதலில்; ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 78 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More