136
சிரிய படைவீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சிரிய படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் பலவந்த கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் பிறந்த ஸ்பெய்ன் பெண் ஒருவர் சிரிய படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சிரிய படையினர் தமது சகோதரரை கைது செய்து காணாமல் போகச் செய்தனர் என அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார். சிரிய படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றமொன்றில் வழக்கு விசாரணை செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love