இலங்கை

வில்பத்து வர்த்தமானி குறித்து பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி


வில்பத்து வனப்பகுதிக்கு வடக்கு திசையில் அமைந்துள்ள 04 வனப் பிரதேசங்களையும் வில்பத்து வனத்துடன் இணைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி கடந்த வாரம் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்டது.

இந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையினால் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply