இலங்கை

வரட்சியால் ஆட்சி கவிழும் என்ற சிலரின் கனவு தவிடுபொடியாகி விட்டது – ஜனாதிபதி

கடுமையான வரட்சியினால் நாடு அழிந்து போகும் என்றும் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்திருந்தவர்களின் கனவு தவிடு பொடியாகி விட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது வரட்சி இல்லை எனவும்  குளங்கள் நிரம்பியுள்ளன எனவும் இனிமேல் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது இலக்காகும்  எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பேண்தகு இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான கண்காட்சியை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு எல்லா அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  விமர்சனங்கள் முன்வைப்பது ஜனாநாயக நாடுகளின் சுபாவமாகும். எனினும் விமர்சனங்களுக்கு பின்னால் நாம் செல்லாம் எனவும் எமது இலக்குகளை சிறப்பான முறையில் வெற்றிக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply