150
சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளித்து வருவதனை எதிர்ப்பதாக ஜீ7 நாடுகள் தெரிவித்துள்ளன. அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் லுக்கா நகரில் ஜீ7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த நிலையில் சிரியாவிற்கு வழங்கி வரும் ஆதரவினை ரஸ்யா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாறாக சமாதான முனைப்புக்களில் ரஸ்யா பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love