167
பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்ட பேர் கொல்லப்பட்டுள்ளனர். பன்னல போகஹா எலிபிச்சிய என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இரவு 10.00 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரண்டு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 30 மற்றும் 32 வயதான இரண்டு பேர் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
அயலவருடன் ஏற்பட்ட மோதலே இந்த கொலைகளுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Spread the love