Home இந்தியாஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம்

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம்

by admin

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என  உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம் உறுதி அளித்துள்ளது.  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு கடந்த 3ம்திகதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வேளை தமிழக அரசு மே மாதம் 14ம் திகதிக்குள்  உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென தெரிவித்திருந்தது.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை செய்ய இயலாது எனவும்  வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையாமையினால்  தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை எனவும்   சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இது குறித்த வழக்கு நேற்றையதினம் இடம்பெற்ற போது  ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனவும் ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவை தளர்த்தி கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்  எனவும் உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More